இலங்கைத் துறைமுகம் வந்தடைந்த சீனாவின் அதிநவீனக் கப்பல்- இந்தியாவுக்கான அச்சுறுத்தல் என்ன?

இந்தியாவின் எதிர்ப்புக்கு மத்தியில் சீனாவின் கப்பல் இலங்கையின் ஹம்பனோட்டா துறைமுகத்தில் நேற்று வந்து நின்றது. இலங்கைத் துறைமுகத்துக்கு சீனாவின் கப்பல் வருவதை தள்ளிவைக்கச் சொல்லி இந்தியா கோரியது.

ஆனால், சீனாவின் கப்பல் நேற்று வந்தது. சீனாவின் கப்பல் இலங்கையில் நிறுத்தப்படுவதால் இந்தியாவின் பாதுகாப்பு எந்த வகையில் கேள்விக்குள்ளாகிறது என்பதைத் தெரிந்துகொள்ளவேண்டியுள்ளது.

சீனாவின் கப்பலான யுயாங் வாங் 5 சென்சாரைக் கொண்டுள்ளது. அந்தக் கப்பலின் மூலம் இந்தியா ஏவுகணை சோதனை நடத்தினால் அதனைக் கண்டறிய முடியும். ஒடிசா கடற்கரையில் உள்ள அப்துல் கலாம் தீவில் இந்தியா தனது ஏவுகணைகளை சோதித்து வருகிறது.

சீன கப்பலிலுள்ள உயர்தர தொழில்நுட்பத்தின் மூலம் இந்திய ஏவுகணையின் துல்லியம் மற்றும் நிலையைக் கண்டறிய முடியும். ஆக்ஸ்ட் மாதம் 22-ம் தேதி வரையில் அந்தக் கப்பல் இலங்கை துறைமுகத்தில் நிறுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. சீனாவிலிருந்து ஜூலை 14-ம் தேதி புறப்பட்ட இந்தக் கப்பல் எந்த துறைமுகத்திலும் நிறுத்தப்படாமல் இலங்கைத் துறைமுகத்துக்கு வந்து சேர்ந்துள்ளது.

இந்தச் சீனக் கப்பல் பெருங்கடல் ஆய்வை மேற்கொண்டுள்ளது. அதன்மூலம் இந்தியப் பெருங்கடலில் நீர்மூழ்கிப் கப்பல் நடவடிக்கையை மேற்கொள்ள முடியும்.

2014 ஆம் ஆண்டு சீனாவின் அணு சக்தி நீர்மூழ்கிக் கப்பலை அதன் துறைமுகம் ஒன்றில் நிறுத்துவதற்கு கொழும்பு அனுமதி வழங்கியதையடுத்து, இந்தியா-இலங்கை உறவுகளில் விரிசல் ஏற்பட்டது. இந்தமுறை, சீனக் கப்பலில் தானியங்கி கண்டறியும் கருவியை ஆன் செய்துவைத்திருக்க வேண்டும். அறிவியல்பூர்வமான சோதனைகளைச் செய்ய அனுமதியளிக்க மாட்டோம் என்று இலங்கை சீனாவிடம் தெரிவித்துள்ளது.

ஹம்பன்டூடா துறைமுகத்துக்கு சீன நிறுவனம்தான் பொறுப்பாளராக உள்ளது. அவர்கள்தான் துறைமுக செயல்பாட்டை மேற்கொள்கிறார்கள் என்று இலங்கை துறைமுக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இலங்கை அரசு அதனுடைய வளர்ச்சிப் பணிக்காக வாங்கிய லோனை அடைக்க முடியாததன் காரணமாக இலங்கையின் ஹம்பன்டூடா துறைமுகத்தை சீன நிறுவனம் 99 ஆண்டுகள் குத்தகைக்கு எடுத்தது குறித்து இந்தியா கவலையைத் தெரிவித்திருந்தது. இந்த துறைமுகத்தை ராணுவத் தேவைக்கு சீனா பயன்படுத்தும் என்ற அச்சத்தை தொடர்ச்சியாக ஏற்படுத்திவருகிறது. இந்தியா – சீனாவுக்கு இடையே எல்லைப் பிரச்னை நீடித்துவரும் நிலையில் இலங்கையின் உள்கட்டமைப்புக்கு நிதி வழங்குவதில் சீனா முக்கியநாடாக இருப்பது இந்தியாவுக்கு கவலை அளிக்கும் ஒன்றாக உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.