ரணிலின் வீட்டிற்கு தீ வைக்கப்பட்டது தொடர்பாக வரிசையில் விசாரணை!
நேற்றைய தினம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வீடு எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்பிலேயே இது இடம்பெற்றுள்ளது.
மேலும், இது தொடர்பாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்று கேள்வி விசாரணை நடத்தியுள்ளனர்.
அன்றைய தினம் வீடு தீவைக்கப்படுவதற்கு முன்னர் வீட்டின் முன் ஆர்ப்பாட்டம் நடத்தியது மற்றும் அந்த இடத்திற்கு மக்களை வரவழைத்தது தொடர்பாக இவ்விசாரணைகள் இடம் பெற்றுள்ளனரணிலின் வீட்டிற்கு தீ வைக்கப்பட்டு வரிசையில் நின்று கேள்வி!.