தடுப்புக்காவல் சர்வதேச சட்டத்திற்கு எதிரானது! வசந்த முதலிக்காக சர்வதேச மன்னிப்பு சபையின் குரல்!
சிவில் நடவடிக்கைகளுக்காக போராட்டக்காரர்களுக்கு எதிராக பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்த வேண்டாம் என சர்வதேச மன்னிப்புச் சபை இலங்கை அரசாங்கத்திடம் கோரியுள்ளது.
பல்கலைக்கழகங்களுக்கிடையிலான மாணவர் பேரவையின் அழைப்பாளர் வசந்த முதலிகே தற்போது பயங்கரவாத விசாரணைப் பிரிவில் (TID) தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்திகள் குறித்து அந்த அமைப்பு ஆழ்ந்த கவலையடைவதாக சர்வதேச மன்னிப்புச் சபை மேலும் தெரிவித்துள்ளது.
எதிர்ப்பாளர்களை தன்னிச்சையாக தடுத்து வைப்பதும், பயங்கரவாதம் தொடர்பான குற்றச்சாட்டுகள் போன்ற அவர்களின் நடவடிக்கைகளால் நியாயப்படுத்தப்படாத கடுமையான கிரிமினல் குற்றங்களை சுமத்துவதும் சர்வதேச சட்டத்திற்கு எதிரானது என்று அந்த அமைப்பு வலியுறுத்துகிறது.
மாறாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தை திரும்பப் பெறுமாறு அந்த அமைப்பு அரசாங்கத்திடம் கோரியுள்ளது.