கண்ணீர்ப்புகைக் குண்டுகளை பயன்படுத்துவதை நிறுத்துமாறு ஜெனிவாவிலிருந்து இலங்கைக்கு ஒரு அறிவிப்பு
சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனிவா மனித உரிமைகள் பேரவை, போராட்டங்களை ஒடுக்க பாதுகாப்புப் படையினர் பயன்படுத்திய கண்ணீர்ப்புகைக் குண்டுகளை நிறுத்துமாறு இலங்கைக்கு அறிவித்துள்ளது.
இலங்கையில் இடம்பெற்று வரும் போராட்டங்களை ஒடுக்குவதற்காக பயன்படுத்தப்பட்ட கண்ணீர் புகை குண்டுகளில் கண்களுக்கு தீங்கு விளைவிக்கும் நச்சு இரசாயனம் உள்ளதாக சபை தெரிவித்துள்ளது.
அத்துடன் இலங்கை அரசுக்கு கண்ணீர் புகை குண்டுகள் மேற்கத்திய நாடுகளிலிருந்து மேற்கொள்ளப்பட்டு வந்ததும் தெரியவந்துள்ளது.
இலங்கையில் நடக்கும் போராட்டங்களை அடக்க, குறைந்தபட்ச பலத்தை பயன்படுத்துவதாக சொல்லிக் கொண்டு, கண்ணீர் புகை குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தும் பணியில், போலீசார் ஈடுபட்டு வருவதால், பல போராட்டக்காரர்கள், கண்ணீர் புகை குண்டுகளால் கண்களை திறக்க முடியாமல், மயக்கம் மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.