இரண்டரை ஆண்டுகளில் நாடாளுமன்றத்தை கலைக்கக் கூடாது ! மொட்டுவின் 80 எம்.பி.க்கள் ரணிலுக்கு மனு!
இருபத்தி இரண்டாவது அரசியலமைப்பு திருத்தத்தில் சேர்க்கப்பட்டுள்ள அறிக்கையின்படி, நாடாளுமன்றத்தை இரண்டரை ஆண்டுகளில் கலைக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் வழங்கினால், மசோதா மீதான வாக்கெடுப்பில் பங்கேற்பதில்லை என எண்பது நாடாளுமன்ற உறுப்பினர்கள்வரை கையெழுத்திட்டு ஜனாதிபதியிடம் மனு கொடுத்துள்ளனர்.
இவ்வாறு மனுவில் கையொப்பமிடும் எம்.பி.க்கள் குழுவில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் குழுவும், நாடாளுமன்ற சுயேச்சை உறுப்பினர்கள் குழுவும் உள்ளடங்குகின்றன.
இந்த மனுவில் கையொப்பமிட்டு, நாடாளுமன்றத்தை இரண்டரை வருடங்களின் பின்னர் கலைப்பதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் வழங்கும் ஷரத்தை நான்கரை வருடங்களாக மாற்ற வேண்டும் என எம்பிக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை, இருபத்தி இரண்டாவது அரசியலமைப்பு திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள இரண்டரை வருடங்களில் பாராளுமன்றத்தை கலைப்பதற்கு ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம் தொடர்பான சரத்து தொடர்பில் அரசாங்க உறுப்பினர்களுக்கு இடையில் இழுபறி ஏற்பட்டுள்ளது.
இரண்டரை ஆண்டுகளில் பாராளுமன்றம் கலைக்கப்பட வேண்டும் என்பது 20வது அரசியலமைப்பு திருத்தத்தில் உள்ளடங்கிய ஒரு ஷரத்தாகும்.