சோசலிச மாணவர் ஒன்றியத்தின் (JVP), ரங்கன லக்மால் தேவப்பிரிய கைது.
இன்று (22) காலை கொம்பனித் தெரு பொலிஸாரால் சோசலிச மாணவர் ஒன்றியத்தின் தேசிய அமைப்பாளர் ரங்கன லக்மால் தேவப்பிரிய கைது செய்யப்பட்டதாக சோசலிச மாணவர் ஒன்றியம்(JVP மாணவர் அமைப்பு) அறிவித்துள்ளது.
அதன் பின்னர், ரங்கன லக்மால் தேவப்பிரியவை , கொழும்பு கோட்டை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக அந்த சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளை, கடந்த ஜூலை மாதம் இடம்பெற்ற மக்கள் போராட்டத்தின் போது இலங்கை ரூபவாகினி கூட்டுத்தாபன வளாகத்திற்குள் பலவந்தமாக பிரவேசித்த குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த இரண்டாவது நபரான சமிந்த கலும்பிரிய அமரசிங்க இன்று குருந்துவத்தை பொலிஸில் சரணடைந்த பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காலி முகத்திடல் அரச எதிர்ப்புப் போராட்டத்தின் போது தனிஷ் அலியுடன் சமிந்த கலும்பிரிய அமரசிங்க, இலங்கை ரூபாவாகினி கூட்டுத்தாபன வளாகத்திற்குள் பலவந்தமாக பிரவேசித்தார்.