ஆசிய கோப்பை கிரிக்கெட்: இலங்கையை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அபார வெற்றி.

15-வது ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரக நாட்டில் தொடங்கியது. துபாயில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இலங்கை-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 19.4 ஓவர் முடிவில் 105 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

அதிகபட்சமாக பானுகா ராஜபக்சே 38 ரன்கள் அடித்தார். சமிகா கருணாரத்னா 31 ரன்கள் எடுத்தார். இலங்கை வீரர்கள் சரித் அசலங்கா, கேப்டன் தசுன் ஷனகா, மகிஷ் தீட்சனா ஆகியோர் டக் அவுட்டாகினர். ஆப்கானிஸ்தான் தரப்பில் ஃபசல்ஹக் ஃபரூக்கி 3 விக்கெட்களை சாய்த்தார். முஜிபூர் ரஹ்மான், முகமது நபி தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். நவீன் உல்கக் ஒரு விக்கெட்டை கைப்பற்றினார்.

இதையடுத்து 106 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணியில் தொடக்க வீரர் ஹஜ்ரத்துல்லாஹ் 37 ரன்கள் அடித்து களத்தில் இருந்தார். மற்றொரு வீரர் ரஹ்மானுல்லா 40 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இப்ராகிம் 15 ரன்கள் எடுத்து நிலையில் ரன் அவுட்டானார்.10.1 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்களை குவித்த ஆப்கானிஸ்தான் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Leave A Reply

Your email address will not be published.