ஐ.நா. மாநாட்டில் இலங்கை குறித்து வெளிவிவகார அமைச்சர் அறிக்கை நீதி அமைச்சரும் ஜெனிவா பயணம்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் இலங்கை தொடர்பான கலந்துரையாடலின்போது வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கவுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 51 ஆவது அமர்வு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 12ஆம் திகதி முதல் ஒக்டோபர் 7ஆம் திகதி வரை ஜெனிவாவில் நடைபெறவுள்ளது.
இதில் இலங்கை தொடர்பில் எதிர்வரும் செப்டம்பர் 12ஆம் திகதி கலந்துரையாடலை நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கான இலங்கை தூதுக்குழுவுக்கு வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தலைமை தாங்கவுள்ளதோடு அன்றைய தினம் சபையில் அறிக்கை ஒன்றையும் முன்வைக்கவுள்ளார் என்று வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன் நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்சவும் இந்தத் தூதுக்குழுவில் இணைந்துகொள்ளவுள்ளார்.