பெரமுன மேலும் சிதறும்; டலஸ் அணி பலம் பெறும் சிங்கள வார இதழ் செய்தி.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மேலும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் டலஸ் ஆதரவு அணியில் இணையக்கூடும் என ‘மொட்டு’க் கட்சியின் உள்ளகத் தகவல்களை மேற்கோள்காட்டி சிங்கள வார இதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதற்கான பேச்சுகள் வெற்றியளித்துள்ளன எனவும், விரைவில் தாவல் அரங்கேறும் எனவும் தெரியவருகின்றது.
பெரமுனவில் இருந்து டலஸ் அழகப் பெரும, பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் உட்பட 13 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளியேறியுள்ளனர். அவர்கள் தற்போது புதியதொரு அரசியல் இயக்கத்தை உருவாக்கியுள்ளனர்.
இந்நிலையில், டலஸ் தரப்பை இணைத்துக்கொள்வதற்கு ஐக்கிய மக்கள் சக்தியும், விமல் தரப்பும் முயற்சித்து வருகின்றன.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே ‘மொட்டு’க் கட்சி உறுப்பினர்கள் சிலர் டலஸ் பக்கம் சாயவுள்ளனர்.