டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி விபத்தில் உயிரிழப்பு.
குஜராத்தில் இருந்து மும்பை திரும்பிக் கொண்டிருந்த சைரஸ் மிஸ்திரி பயணித்த கார் விபத்தில் சிக்கிய நிலையில், சைரஸ் மிஸ்திரி விபத்தில் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
2012 முதல் 2016 வரை டாடா குழுமத்தின் தலைவராக சைரஸ் பெலான்ஜி மிஸ்திரி இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விபத்தில் உயிரிழந்த சைரஸ் மிஸ்திரியின் உடல் மீட்கப்பட்டுள்ளதாகவும், இந்த விபத்து தொடர்பாக வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
டாடா குழுமத்தியில் பல்வேறு முக்கிய பதவிகளை வகித்தவரான சைரஸ் மிஸ்திரி, சில பிரச்சனைகள் காரணமாக டாடா சன்ஸ் நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்பட்டிருந்தார்.
சைரஸ் மிஸ்திரியின் மறைவுக்கு பிரதமர் மோடி, ஸ்மிரிதி இரானி, பியூஷ் கோயல், தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா உள்ளிட்ட பல தொழிலதிபர்களும், தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.