வட மாகாண மல்யுத்த போட்டியில் முல்லை கலைமகள் வித்தியாலய மாணவன் சாதனை.
தேசிய விளையாட்டு பெருவிழா 2022 வட மாகாணமட்ட மல்யுத்த (wrestling) போட்டியானது நேற்றைய தினம் வவுனியாவில்
மாகாண, கல்வி பண்பாட்டு விளையாட்டுத்துறை அமைச்சின்
வட மாகாண விளையாட்டுத் திணைக்களத்தினால் நடாத்தப்பட்டது.
இதில் வடக்கின் ஐந்து மாவட்டங்களுக்கும் இடையிலான ஆண் பெண் இருபாலருக்குமான திறந்த முறையிலான (open) மல்யுத்த (wrestling) போட்டியில் முல்லைத்தீவு மாவட்ட ஆண், பெண் இரு அணிகளும் மாகாணத்தில் முதலிடத்தைப் பெற்றுக்கொண்டன. அதில் கலைமகள் வித்தியாலய மாணவன் செல்வன் J.வினோஜன் 57kg எடைப்பிரிவில் சிறப்பாக போட்டியிட்டு மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளார்.
அத்துடன் முல்லை மாவட்ட ஆண்கள் அணி இம்முறையுடன் தொடர்ந்து 3வருடங்களாக முதலிடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.