கேரள கஞ்சாவுடன் இருவர் கைது!

யாழ்., வடமராட்சி, மணல்காடு பகுதியில் 37 கிலோகிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
கடற்படையினரால் நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது குறித்த தொகை கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டது.
சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று கடற்படையின் ஊடகப் பிரிவு இன்று அறிவித்துள்ளது.