சார்லஸ் , மன்னராக நாட்டு மக்களுக்கு முதன் முறையாக உரையாற்றினார் (வீடியோ)
மூன்றாம் சார்லஸ் மன்னர் முதல் முறையாக நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
லண்டனில் உள்ள புனித போல் பேராலயத்தில் மன்னர் சார்லஸ் முதன்முறையாக மக்கள் மத்தியில் உரையாற்றினார்.இதில் மூத்த அரசியல்வாதிகள் என 2000க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
“God Save the King” என்று மாற்றப்பட்ட ஆங்கில தேசிய கீதம் அங்கு முதன்முறையாக இசைக்கப்பட்டது.
தனது தாயார் எலிசபெத் மகாராணியின் மறைவால் பிரித்தானிய மக்களும் காமன்வெல்த் மக்களும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர் என மன்னர் சார்லஸ் தெரிவித்துள்ளார்.
தனது பதவிக்காலத்தில் அதிகபட்ச ஆற்றலுடன் பணியாற்றவும், நலன்புரி நடவடிக்கைகளில் பங்களிக்கவும் எதிர்ப்பார்ப்பதாகக் கூறியுள்ள மன்னர் சார்லஸ், அதற்கு அனைவரது நம்பிக்கையின் கரங்களும் தம்மிடம் இருக்கும் என்றார்.
தனது தாயார் எலிசபெத் மகாராணியின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப எப்போதும் வாழ முயற்சிப்பேன் என்றும், தன் மீதும், தனது குடும்பத்தினர் மற்றும் நாட்டு மக்கள் மீது காட்டும் அன்புக்கும், பாசத்திற்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் சார்லஸ் மன்னர் தெரிவித்துள்ளார்.
மன்னர் மூன்றாம் சார்லஸ் தனது மகன் வில்லியம் வேல்ஸ் இளவரசராகவும், அவரது மனைவி கேத்தரின் வேல்ஸ் இளவரசியாகவும் அறிவிப்பதாகவும் அவரது உரையில் அவர் அறிவித்தார்.