நாவிதன்வெளி பிரதேச செயலக வளாகத்தில் வர்த்தக சந்தை.
நாவிதன்வெளி பிரதேச செயலக வர்த்தக சந்தை
நாவிதன்வெளி பிரதேச செயலக வளாகத்தில் வர்த்தக சந்தை இன்று (26) முற்பகல் ஆரம்பமானது.
இவ்வர்த்தக சந்தை கண்காட்சியை பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன் ஆரம்பித்து வைத்தார்.
இரு நாட்களாக இவ்வர்த்தக சந்தை இடம்பெறுவதுடன் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இயங்கும் என ஏற்பாட்டாளர்கள் குறிப்பிட்டனர்.
இவ்வர்த்தக சந்தையினை கல்முனை பிரதேச செயலகத்தின் சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவு விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சு பிரிவு ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இவ்வர்த்தக சந்தையில் உள்ளுர் உற்பத்தி பொருட்கள் உள்ளடங்கிய 20 சிறு கைத்தொழில் நிலையங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதுடன் உற்பத்தியாளர்களும் பார்வையாளர்களுக்கு பல்வேறு விளக்கங்களை அளித்து வருகின்றனர்.
இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் கே.பாக்கியராஜா, சிறு கைத்தொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவின் உதவிப்பணிப்பாளர் கே.ஜி.எஸ்.கே.மந்திலகே, நாவிதன்வெளி உதவி பிரதேச செயலாளர் என்.நவநீதராஜா, நாவிதன்வெளி பிரதேச செயலக கணக்காளர் யூ.எல்.ஜவாஹிர், மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ரி.எம்.ரிம்ஸான், நாவிதன்வெளி பிரதேச செயலகத்தின் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி ஆர்.லதாகரன், நாவிதன்வெளி நாவிதன்வெளி பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர் கே.யோகஸ்வரன் உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.