சென்னையின் ஒரு பகுதி கடலில் மூழ்க போகிறதா? காலநிலை மாற்ற திட்ட வரை அறிக்கை அதிர்ச்சி தகவல்
கடல் மட்டம் உயர்வால் அடுத்த 100 ஆண்டுகளில் சென்னையில் உள்ள மின் நிலையங்கள், பேருந்து, ரயில் நிலையங்கள் கடலுக்குள் முழ்கும் என்று சென்னை கால நிலை மாற்ற திட்ட வரை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சென்னை காலநிலை மாற்ற செயல் திட்ட வரைவு அறிக்கையை சி40 அமைப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் “நெகிழ் திறனுடன் உந்துதலுடன் சென்னை” என்ற தலைப்பில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2050-ம் ஆண்டுக்குள் கார்பன் சமநிலை என்பதை இலக்காக கொண்டு 6 தலைப்புகளில் இந்த செயல் திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் கடல் மட்டம் உயர்வால் சென்னை அதிகம் பாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி கடல் மட்டம் அடுத்த 5 ஆண்டுகளில் 7 செ.மீ உயரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையின் முக்கிய அம்சம்: 2100ம் ஆண்டில் 16 சதவீதம் கடலில் முழ்கும். கடல் மட்டம் உயர்வால் 100 லட்சம் மக்கள் பாதிக்கப்படுவார்கள். 17 சதவீத குடிசையில் வாழும் 2.6 லட்சம் மக்கள் பாதிக்கப்படுவார்கள்.
2100ம் ஆண்டில் 28 பேருந்து நிறுத்தம், 18 மெட்ரோ ரயில் நிலையங்கள் கடலில் முழ்கும். 4 புறநகர் ரயில் நிலையங்கள் கடலில் முழ்கும். 2 மின் நிலையங்கள் கடலில் முழ்கும் அபாமயம் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.