வட மாகாண யூடோ போட்டி : முல்லைத்தீவு மாவட்ட இரு அணிகளும் சம்பியன்!
வட மாகாண ஆண் மற்றும் பெண்களுக்கான யூடோ போட்டியில் முல்லைத்தீவு மாவட்ட ஆண், பெண் இரு அணிகளும் 1ம் இடத்தினை பெற்று கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டது.
ஞாயிறுக்கிழமை மகாண விளையாட்டுத் திணைக்களத்தால் 2022ம் ஆண்டுக்கான நடைபெற்ற வடமகாண ஆண் பெண் அணிகளுக்கான யூடோ போட்டிகள் முல்லைத்தீவு மாவட்ட உள்ளக அரங்கில் நடைபெற்றன.
இதில் முல்லைத்தீவு மாவட்ட ஆண் பெண் இரு அணிகளும் முதலாமிடத்தை தமதாக்கினர்.
முல்லைத்தீவு மாவட்ட ஆண்கள் அணியினர் 4 தங்கப்பதக்கங்கள், 5 வெள்ளிப்பதக்கங்கள், 6 வெண்கலப்பதக்கங்களை பெற்று முதலிடத்தை பெற்றுக்கொண்டது.
4 தங்கம், 4வெள்ளி, 3வெண்கல பதக்கங்களை பெற்று வவுனியா மாவட்ட அணி இரண்டாமிடத்தையும், 1தங்கம் 1வெள்ளிப் பதக்கங்களை பெற்று யாழ்ப்பாண அணி 3ம் இடத்தையும் பெற்றுக் கொண்டன.
முல்லைத்தீவு மாவட்ட பெண்கள் அணி 6 தங்கப்பதக்கங்களையும், 3 வெள்ளிப்பதக்கங்களையும், 6 வெண்கல பதக்கங்களை பெற்று
1ம் இடத்தை பெற்றுக்கொண்டது.
மேலும் 2 தங்கப்பதக்கங்களையும், 4 வெள்ளிப்பதக்கங்களையும், 3 வெண்கல பதக்கங்களை பெற்ற வவுனியா மாவட்ட அணி 2ம் இடத்தை பெற்றுக் கொண்டது.
முல்லைத்தீவு மாவட்ட அணி சார்பாக பாண்டியன்குளம், நட்டான்கண்டல், பாலிநகர், மாங்குளம், தண்டுவான், செம்மலை, கொக்குத்தொடுவாய், உடுப்புக்குளம், செல்வபுரம், உண்ணாப்பிலவு, கரைச்சிக்குடியிருப்பு, இரணைப்பாலை, உடையார்கட்டு, திம்பிலி ஆகிய பிரதேச வீர வீராங்கனைகள் மாவட்ட அணிக்காக பங்களிப்பாற்றியுள்ளனர்.