“இந்த கண்ணீர் உனக்காக அல்ல” – கிறிஸ்ட் சர்ச் கொலைகாரனுக்கு வாழ்நாள் ஆயுள் சிறை!
நான்கு நாட்கள் நடந்த விசாரணையின் பின்னர், கிறிஸ்ட் சர்ச்சின் குற்றவாளிக்கு இன்று நியூசிலாந்து நேரம் காலையில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது, அதாவது ஒருபோதும் மன்னிப்பே இல்லாத ஆயுள் தண்டனையாக விதிக்கப்பட்டது.
சர்வதேச ஊடகங்களின் கவனத்தை ஈர்த்த பாதிக்கப்பட்டவர்களின் அறிக்கைகளின் ஒரு பகுதி பின்வருமாறு……
* * * *
கோபமடைந்தவர்களால் நீதிமன்ற அறை நிரம்பியிருந்தது. அவர்கள் நியூசிலாந்து 2019 கிறிஸ்ட் சர்ச் படுகொலையில் பலியானவர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள். அவர்களுக்கு முன்னால் பிரைண்டன் டரான்ட் என்ற துப்பாக்கிதாரி நிக்கிறான். கோரமான துன்பத்தின் வடுக்கள் நிறைந்த வாழ்நாளில் – கொலையாளியின் முகத்தில் அன்பானவர்களை இழக்கும் பெரும் வலியை அவர்கள் கட்டவிழ்த்துவிடுவதற்கான கடைசி வாய்ப்பாக அது இருந்திருக்கலாம். அதுவரை, அவர்களது இதயங்கள் சமரசம் செய்யப்படாது என எண்ணத் தோன்றியது. துக்கப்படுவதும் கோபப்படுவதும் அவர்களின் உரிமை.
கொல்லப்பட்ட 51 பேர் சார்பில் சுமார் 90 பேர் பேசினர்.
கொலையாளி நியூசிலாந்தின் கிறிஸ்ட் சர்ச்சில் உள்ள இரண்டு தேவாலயங்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினான். மூன்றாவது தாக்குதலையும் நடத்த அவன் திட்டமிட்டிருந்தான் என்பது இப்போது தெரிய வந்துள்ளது.
29 வயதான ஆஸ்திரேலியர் மீது 51 கொலை குற்றச்சாட்டுகள், 40 கொலை முயற்சிகள் மற்றும் ஒரு பயங்கரவாதம் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன.
நீதிமன்ற அறை கண்ணீரும் துக்கமும் நிறைந்திருந்தது. குர்ஆனின் வசனங்கள் இடையிடையே கேட்டன. உள்ளே இருந்தவர்கள் தமது கைகளில் இந்த உலகில் மிகவும் விரும்பிய தமது உறவுகளின் புகைப்படங்களை வைத்திருக்கிறார்கள். அவற்றை குற்றம் சாட்டப்பட்டவன் கண்களில் தெரிய – அவன் பார்ப்பதற்காக அந்த புகைப்படங்களை கையில் வைத்துக் கொண்டிருந்தார்கள். நீதிமன்றம் அவர்களின் அறிக்கைகளை பதிவு செய்தது.
“இந்த கண்ணீர் உனக்காக அல்ல.”
சாரா குவாசம்
சாரா குவாசமின் தந்தை அல் நூர் மசூதியில் வைத்து குற்றம் சாட்டப்பட்டவரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
“என் பெயர் சாரா குவாசம். ஒளிரும் மனிதனின் மகள் – அப்தெல்ஃபாதா காசம். அந்த பெயரை நினைவில் கொள்ளுங்கள் “என்று 24 வயதான சாரா கூறினார்.
அவர் தனது தந்தையின் வாழ்க்கையின் கடைசி தருணங்களை நினைவு கூர்ந்தார். “அவர் காயப்பட்டிருக்க வேண்டும். அவர் பயந்திருக்க வேண்டும். அவர் இறுதியாக என்ன நினைத்தார்?” எல்லாவற்றிற்கும் மேலாக, நான் அவரது கையைப் பிடித்து, அந்த நேரத்தில் எல்லாம் சரியாகிவிடும் என்று அவரிடம் சொல்ல விரும்பினேன், ஆனால் என்னால் அதைச் செய்ய முடியவில்லை … ”
அவர் தனது தந்தையுடன் ஒரு சுற்றுலாவிற்கு செல்ல திட்டமிட்டிருந்ததாகவும், அந்த உல்லாசப் பயணங்களின் போது தனது தந்தை சமைத்த உணவை அவள் நுகர முடியும் என்று நினைத்ததாகவும் அவர் கூறினார்.
பின்னர் ஒரு கணம் இடைநிறுத்தியவள் அழத் தொடங்கினாள் . அவள் டரான்ட்டைப் பார்த்து இப்படிக் கூறினார்.
“இந்த கண்ணீர் உனக்காக அல்ல …!”
“நீதான் இங்கே பாதிக்கப்பட்டவன் என்று நினைக்கிறேன் .. நாங்கள் தப்பிப்பிழைத்தவர்கள் …!”
ஹமியா துவானின் மனைவி ஜெகாரியா துவான் கண்களை மூடுவதற்கு முன்பு 48 நாட்கள் காயங்களுடன் போராடினார். அவளுடைய இழப்பு பற்றி அவள் சொன்னது இதுதான்.
“என்னிடம் எவ்வளவு பணம் இருந்தாலும் என் மகன்களின் தந்தையை திரும்ப அழைத்து வர முடியாது. நான் அவரை நினைவில் வைத்திருக்கிறேன்.” அவர் எப்படி சமைத்தார் .. அவரது நகைச்சுவைகள் .. அவர் என் மெய்க்காப்பாளர். அவர்தான் என்னை மகிழ்வித்தவர், என்னை வசதியாக வைத்தவர், அவர் எனது சிறந்த நண்பர்.
“என் மூத்த மகனுக்கு தந்தையின் ஐந்து வருட நினைவுகள் உள்ளன. என் மகன் கேட்கிறான், “அவர் ஏன் என் பாபாவை(தந்தையை) கொன்றார்? என்று …. என் தந்தையை கொன்றவர் மொன்டிசோரி குழந்தைகளைத் தாக்கும் குழந்தையைப் போன்றவர் என்று சொன்னேன், ஏனென்றால் பாலர் பள்ளியில் மற்ற குழந்தைகளுடன் விளையாடுவது அவருக்குத் தெரியாது.”
“மற்ற குழந்தைகள் தந்தையுடன் இல்லாதபோது என் மகனின் கண்களில் தந்தை இல்லா தனிமையை என்னால் காண முடிகிறது …”
“ஆனால் உன் முட்டாள்தனமான செயல்களால், ஆயிரக்கணக்கான நியூசிலாந்தர்கள் எங்களுடன் சேர்ந்துள்ளனர்.”
“நீங்கள் இங்கே பாதிக்கப்பட்டவர் என்று நினைக்கிறேன் .. நாங்கள் தப்பிப்பிழைத்தவர்கள் …!”
“நீ ஒரு குப்பைத் தொட்டி …!”
அல்-நூர் மசூதியில், நபி அஹத் தனது வயதான தந்தையை வாழ்வில் இழந்தவர். நியூசிலாந்து வாரியர்ஸ் ரக்பி அணியின் உறுப்பினரான அகமது தனது கோபத்தை வெளிப்படுத்த முயற்சிக்கவில்லை.
“நீ ஒரு புழு,” என்று அவர் கூறினார். “உன் தந்தை குப்பை சேகரிப்பவர். நீ சமூகத்தில் ஒரு குப்பைத் தொட்டியாகிவிட்டாய்.” சத்தமாக சொன்னார்.
ஆகாப் டாபி
பின்னர் அவர் இந்த நபரை சிறையிலிருந்து வெளியே வர விட வேண்டாம் என்று நீதிபதியிடம் வேண்டுகோள் விடுத்தார்.
“எங்களின் ஒரே குற்றம் ஒரு முஸ்லிமாக பிறந்ததா?”
மைசூன் சலாமா முஹம்மது அதா எலயனின் தாய். தனது மகனின் வாழ்க்கையின் கடைசி தருணங்களை அவள் கண்ணீரில் நினைவு கூர்ந்தாள், அவளுடைய உறவினர்களும் நண்பர்களும் அவ்வப்போது அவளை கட்டிப்பிடித்து தேற்றி ஆறுதல்படுத்த வேண்டியிருந்தது.
“ஒரு தாயாக, என் இதயம் ஒரு மில்லியன் தடவைகள் உடைந்துவிட்டது. பிரசவ வலியைப் போல அதே வலியை மீண்டும் மீண்டும் உணர்கிறேன்.” என்றார்.
“என் அன்பான ஆட்டா அந்த வலியை எப்படி உணர்ந்திருக்க வேண்டும் என்று நான் எப்போதும் நினைக்கிறேன்.”
“அவர் எப்படி துப்பாக்கிச் சூட்டை எதிர்கொண்டார்? இது அவரது வாழ்க்கையின் முடிவு என்பதை உணர்ந்தபோது அவரது மனதில் என்ன இருந்திருக்க வேண்டும்?” 51 அப்பாவி மக்களின் உயிரை நீ எடுத்தாய் ..
“அவர்கள் செய்த ஒரே குற்றம் ஒரு முஸ்லீமாகப் பிறந்ததுதான் …!”
“நீ தோற்கடிக்கப்பட்டாய் … நீ எங்களை பலப்படுத்தினாய் …”
பலமுறை சுடும் போது வசிம் சத்தி அலி தராக் தனது மகளுடன் அல் நூர் மசூதியில் இருந்தார். அவர் நேராக குற்றம் சாட்டப்பட்டவரின் முகத்தைப் பார்த்து பேசத் தொடங்கினார்.
“உன்னைத் தவிர அனைவருக்கும் நல்ல மாலை” என்று அவர் கூறினார். “துப்பாக்கியை எவ்வாறு பயன்படுத்துவது என்று உனக்குத் தெரியாததால் நாங்கள் இன்று இங்கே உயிரோடு இருக்கிறோம்.” என்றார்.
வஸ்ஸீம் தராக்மி
இதைக் கேட்ட கொலையாளி சத்தமாக சிரித்தான், பின்னர் உடனே வாயை மூடிக்கொண்டான்.
பின்னர் அடக்குமுறையாளரின் வார்த்தைகள் கனமானவையாக இருந்தது.
பின்னர் தரக்மியாவின் வார்த்தைகள் தீவிரமான தன்மையைப் பெற்றன. “எங்கள் சமூகத்தை அழிக்க நீ தவறிவிட்டாய்” என்று அவர் கூறினார்.
“நீ செய்த காரியம் எங்கள் சமூகத்தை அழித்து எங்கள் நம்பிக்கையை சிதைத்துவிட்டது என்று நீ நினைத்தால், நீதான் தோல்வியுற்றாய். நீ எங்களை ஐக்கியப்படுத்தினாய். நாங்கள் ஒரு நோக்கத்திற்காக ஒன்றாக இணைத்தோம், “என்று அவர் கூறினார்.
* * *
இத்தனைக்கும் நடுவே கொலையாளி எதுவும் பேசவில்லை.
அவர் என்ன சொல்வது? அவர் சட்டத்தால் தண்டிக்கப்படாவிடினும் , அவரது மனசாட்சியின் அவருக்கு மரண தண்டனை கிடைத்திருந்தது. நியூசிலாந்தில் மரண தண்டனை தடை செய்யப்பட்டுள்ளதால் மட்டுமே, அவர் தனது வாழ்நாள் முழுவதையும் தனிமைச் சிறையில் அடையுண்டு வாழ வேண்டியுள்ளது.
இதற்கிடையில், ஒரு பெண் கூறினார். “ஒருநாள் நான் அவரை மன்னிப்பேன் … ஆனால் அது இன்று இல்லை.” என்றார்.
கிறிஸ்ட் சர்ச் மீதான தாக்குதலில் இறந்த மக்கள்
கொலையாளி பிரைண்டன் டரான்ட்
கிறிஸ்ட் சர்ச் கொலையாளிக்கு தண்டனை கிடைக்கப்பட்டுள்ளதோடு இப்போது எந்த மன்னிப்பும் இன்றி காலம் முழுவதும் உள்ளே தனிமை சிறையில் வாழ ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்து வரலாற்றிலேயே ஒரு நபர் பயங்கரவாதத்திற்காக தண்டனை பெறுவது இதுவே முதல் முறையாகும்.