வங்கிகளில் பெறப்பட்ட பணத்தை விட பலமடங்கு செலுத்த வேண்டிய நிலையால் தூக்கில் தொங்கிய நபர்.
வங்கிகளில் வட்டிக்குப் பெறப்பட்ட பணத்தை விட பலமடங்கு வட்டியுடன் பணத்தை உடனடியாக செலுத்த வேண்டிய நிலை? – மட்டக்களப்பில் நபொருவர் தூக்கில் தொங்கினார்
வங்கிகளில் வட்டிக்குப் பெறப்பட்ட பணத்தை விட பலமடங்கு வட்டியுடன் பணத்தை உடனடியாக செலுத்த வேண்டிய நிலை ஏற்பட, தனது குடியிருந்த வீட்டையும், கடைத்தொகுதியையும் விற்று தனியார் வங்கியொன்றுக்கு பணத்தை செலுத்தியிருக்கிறார்.
75 லட்சம் ரூபா வங்கியிலிருந்து பெறப்பட்ட பணத்துக்கு, 03 கோடியே 20 லெட்சம் ரூபா தனது சொத்துக்களை விற்று செலுத்தியிருக்கிறார்.
இந்த நிலையில் மற்றுமொரு நிறுவனத்தில் வட்டிக்கு பெறப்பட்ட 75 லட்சத்துக்கும் மாதாந்தம் கட்டி வந்த தொகையைவிட இருமடங்கு கட்டிவரவேண்டுமென்று அவர்கள் வற்புறுத்தியதால்,
மேற்கொண்டு எதுவும் செய்ய முடியாத நிலையில்,
ஏற்கனவே விற்கப்பட்ட கடைத்தொகுதியின் பின்புறமாகவுள்ள ஸ்டோர் அறையின் வளையில் கயிற்றினால் கழுத்தில் சுருக்கிட்டு தொங்கி காலை (27/08) மரணித்துள்ளார்..
விற்கப்பட்ட கடையை, வாங்கிய முதலாளி ஓடாவி மேசன்மார்களை வைத்து திருத்த வேலைகளை செய்துவருவதால், இன்று காலை திருத்த வேலைகளுக்காக வந்த ஒடாவி ஒருத்தரே ஸ்டோர் அறைக்கு சென்றபோது, .இவர் தூக்கிட்டிருப்பதை அடையாளம்கண்டு, அவரது மனைவிக்கு தெரியப்படுத்தியிருக்கிறார்.
பின்னர் ஏறாவூர் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டு, கௌரவ நீதிபதியின் உத்தரவுக்கமைய, பிரதேச மரண விசாரனை அதிகாரி MSM நஸீர், தடயவியல் பொலிசாரின் வருகையோடு சம்பவ இடத்துக்கு சென்று விசாரனைகளை மேற்கொண்டு,
பிரேத பரிசோதனைக்காக சடலத்தை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளார்.