சென்செக்ஸ், நிஃப்டி வீழ்ச்சி: 26 நிறுவனங்களின் பங்குகள் சரிவு
வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவுடன் நிறைவடைந்தன.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 638 புள்ளிகள் சரிந்து 56,788.81 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவடைந்தது. மொத்த வர்த்தகத்தில் இது 1.11 சதவிகிதம் சரிவாகும்.
இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 207 புள்ளிகள் சரிந்து 16,887.35 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவு பெற்றது. மொத்த வர்த்தகத்தில் இது 1.21 சதவிகிதம் சரிவாகும்.
சென்செக்ஸ் பட்டியலிலுள்ள முதல் 30 தரப்பங்குகளில் 26 நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் காணப்பட்டன. அதிலும் குறிப்பாக மாருதி சுசூகி (-3.16), எச்யூஎல் (-2.77), இந்துஸ்இந்த் வங்கி (-2.55), ஐடிசி (-2.32), பஜாஜ் பைனான்ஸ் (-2.26) ஆகிய நிறுவனங்களின் பங்குகள் கடும் சரிவைச் சந்தித்தன.
டாக்டர் ரெட்டி 1.99 சதவிகிதமும், பார்தி ஏர்டெல் 0.46 சதவிகிதமும், என்டிபிசி 0.41 சதவிகிதமும், விப்ரோ 0.05 சதவிகிதமும் உயர்வுடன் காணப்பட்டன.