‘மொட்டு’வின் 6 பஉறுப்பினர்கள் டலஸ் அணியுடன் கைகோர்க்க இணக்கம்!
டலஸ் அழகப்பெரும தலைமையில் இயங்கும் சுயாதீன எம். பிக்கள் குழுவில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மேலும் 6 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணையவுள்ளனர் என்று கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜீ. எல். பீரிஸின் இல்லத்துக்குக் கடந்த வாரம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு ஒன்று சென்றிருந்தது.
அநுர பிரியதர்சன யாப்பா, பிரியங்கர ஜயரத்ன, சுதர்சினி பெர்னாண்டோபுள்ளே, ஜயரத்ன ஹேரத், சந்திம வீரக்கொடி, ஜோன் செனவிரட்ன ஆகியோர் இந்தக் குழுவில் இருந்தனர்.
இவர்களுடன், டலஸ் அழகப்பெரும, சரித் ஹேரத், நாலக கொடஹேவா, டிலான் பெரேரா ஆகியோர் சந்தித்துப் பேச்சு நடத்தினர்.
சந்திப்பின் நிறைவில், இரு தரப்பினரும் ஒருமித்த நிலைப்பாட்டுடன் செயற்பட உடன்பட்டனர் என்று தெரியவந்துள்ளது.