இந்திய பொருளாதாரம் பல்வேறு சவால்களை எதிர்கொள்கிறது: நிர்மலா சீதாராமன்
இந்திய பொருளாதாரம் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்திர கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஆறு நாள்கள் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மாலா சீதாராமன், உலகளாவிய மந்தநிலை மற்றும் அனைத்து முக்கிய பொருளாதாரங்களின் வளர்ச்சி விகிதங்கள் குறைப்பு அறிக்கைகளுக்கு மத்தியில், இந்தியாவின் ஒப்பீட்டளவில் மற்றும் முழுமையான வளர்ச்சி செயல்திறன் மீதான நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.
மேலும், இந்த நிதியாண்டில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் சுமார் 7 சதவீதமாக இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
மிக முக்கியமாக, இந்த பத்தாண்டுகளில் இந்தியாவின் ஒப்பீட்டு மற்றும் முழுமையான வளர்ச்சி செயல்திறன் குறித்து நான் நம்பிக்கை கொண்டுள்ளேன் என்று கூறினார்.
இருப்பினும், சுழலும் உலகளாவிய பொருளாதார தாக்கத்திலிருந்து இந்தியப் பொருளாதாரம் விடுபடவில்லை என்பதை அமைச்சர் குறிப்பிட்டார்.
எதிர்காலத்தில் இந்தியப் பொருளாதாரம் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்னைகளில் ஒன்று எரிசக்தியின் விலை மற்றும் கிடைக்கும் தன்மையில் உள்ள சிரமம், மின்சாரம், உரத்தின் விலை உயர்வு மற்றும் அவை கிடைப்பதில் உள்ள சிரமம். நாட்டில் சில பகுதிகளில் உணவு பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் இந்தியா உள்பட பல நாடுகளுக்கான வளர்ச்சி கணிப்புகள் குறைவாகவே திருத்தப்பட்டுள்ளன.
தென்மேற்கு பருவமழை, பொது முதலீடு, திறன் பயன்பாட்டில் முன்னேற்றம், கடன் வளர்ச்சியில் பரந்த அடிப்படையிலான மறுமலர்ச்சி, வலுவான கார்ப்பரேட் இருப்புநிலைகள், உற்சாகமான நுகர்வோர் மற்றும் வணிக நம்பிக்கை மற்றும் குறைந்து வரும் அச்சுறுத்தல் ஆகியவற்றால் இந்தியா தனது வளர்ச்சிப் பாதையை உருவாக்கியுள்ளது.
முதல் காலாண்டில் பொருளாதார நடவடிக்கைகளின் பரந்த அடிப்படையிலான வளர்ச்சி, வேலைவாய்ப்பில் முன்னேற்றத்தில் பிரதிபலித்துள்ளதாகவும், இந்தியாவின் தேசிய வருங்கால வைப்பு நிதி பதிவுகளின் அடிப்படையில், ஜூன் 2022 உடன் முடிவடைந்த காலாண்டில் பல தொழில்களில் முன்னேற்றம் காணப்பட்டதாக தெரிவித்தார்.
தொற்றுநோயிலிருந்து மீள்வதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், பல துறைகள் இப்போது தொற்றுநோய்க்கு முந்தைய செயல்பாட்டு அளவைத் தாண்டிவிட்டது, உள்நாட்டு மற்றும் சர்வதேச சுற்றுலா பின்தங்கிய நிலையில் உள்ளது, ஆனால், அவை இடைவெளிக்கான காலத்தில் இருந்து வேகமாக மீண்டு வருவதாக நிர்மலா சீதாராமன் கூறினார்.
பிப்ரவரி 2022 இல், உக்ரைன்-ரஷியா தாக்குதலுக்கு பிறகு, உள்நாட்டில் உணவு மற்றும் எரிபொருள் விலைகளில் அதிகரிப்பு ஏற்பட்டது. வாழ்க்கைச் செலவு அதிகரித்து வருவதால், வாங்கும் சக்தியின் அரிப்பு மூலம் நுகர்வு குறையாமல் இருப்பதை இந்தியா உறுதி செய்ய வேண்டியிருந்தது. அப்போது, சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரிகளை குறைத்தோம் மற்றும் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரிகளை குறைத்தோம். பணவீக்கம் ஏற்படாமல் இருப்பதை உறுதிசெய்ய மத்திய வங்கி விரைவாக செயல்பட்டது. இந்த காலகட்டங்களில் பல சிக்கலான சவால்களை நாங்கள் பல்வேறு தலையீடுகள் மூலம் எதிர்கொண்டோம். இந்தியா அதன் தடுப்பூசி உற்பத்தி மற்றும் தடுப்பூசியை அதிகரித்தது. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளை இந்தியா 2 கோடி டோஸ்களுக்கு மேல் வழங்கியது. இந்தியாவின் டிஜிட்டல் உள்கட்டமைப்பு இலக்கு நிவாரணத்தை வழங்குவதை உறுதி செய்தது.
ஜூலை 2022 இல் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, ஒவ்வொரு நாட்டின் மக்கள்தொகையின் விகிதம் உயர்ந்து வரும் உணவு மற்றும் எரிப்பொருள்கள் விலைகளால் வறுமையில் விழுவது இந்தியாவைப் பொறுத்தவரை குறைவாக உள்ளது என்று அவர் கூறினார்.
மேலும், இந்தியாவின் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தாக்கல் செய்யப்பட்டும் மத்திய பட்ஜெட்டில், நாட்டின் வளர்ச்சியின் வேகத்தைத் தக்கவைக்க கூடுதல் கவனம் செலுத்தப்படும். இது பணவீக்க பிரச்னைகளை தீர்க்கும் என்று தெரிவித்தார்.
டிசம்பரில் இந்தியா ஜி-20 ஆண்டு கூட்டத்திற்கு தலைமை ஏற்கும் முன், உலகின் தலைசிறந்த 20 பொருளாதாரங்களின் குழுவானது உலகளாவிய பொது நலனுக்காகச் செயல்படும் குறிப்பிடத்தக்க ஆற்றலைக் கொண்டதாக இருக்கும்.
முன்னேறிய நாடுகள் தங்கள் அரசியல் மற்றும் பொருளாதார கொள்கை முடிவுகளின் “உலகளாவிய கசிவுக்கு” பொறுப்பேற்க வேண்டும் என்று கூறிய நிர்மலா சீதாராமன், நாடுகள் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்காமல் இருக்க வேண்டும் என மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
‘ஆத்மநிர்பர் பாரத்’, அல்லது சுயசார்பு கொள்கை, இந்தியா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் உற்பத்திப் பகுதியை அதிகரிக்க வேண்டும் என்பதற்கான அங்கீகாரம், அது “தனிமைப்படுத்துதல்” அல்லது “பாதுகாப்புவாதம்” அல்ல என்று நிதியமைச்சர் கூறினார்.
இந்தியாவை விட்டு வெளியேறுவது குறித்து ஸ்டார்ட்அப் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவும், இந்தியாவில் அவர்கள் தொழிபுரிவதற்கு முடிந்தவரை அனைத்து உதவிகளையும் செய்து தருவதற்கு அரசு தயாராக உள்ளது என்றார்.
ரூபாய் நாணயத்தை ஏற்றுக்கொள்வதை ஊக்குவிக்க இந்தியா பல நாடுகளுடன் தொடர்பு கொண்டுள்ளது.
கரோனா தொற்று கால பின்னடைவில் இருந்து இந்திய பொருளாதாரம் வேகமாக மீண்டு வந்துள்ளது. இந்த கால கட்டத்தில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் கடினமாக இருக்கலாம் என்று கூறினார்.
மேலும், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசின் நோக்கம் நாட்டின் பொருளாதாரத்தை மிகவும் வலுவானதாக மாற்றுவதாகும். அதற்கான டிஜிட்டல் உள்கட்டமைப்பு, நிதி உள்ளடக்கம் உள்ளிட்டவை தயாராக உள்ளது என நிர்மலா சீதாராமன் கூறினார்.
அமெரிக்க நிதியமைச்சர் ஜேனட் எல்லனுடன் செவ்வாயன்று நடந்த விவாதத்திற்குப் பிறகு, நிர்மலா சீதாராமன், “இரு தலைவர்களும் பரஸ்பர நலன்கள் மற்றும் தற்போதைய உலகளாவிய பொருளாதார நிலைமை குறித்து விவாதித்தனர்.”
இந்த சந்திப்பின் போது, நவம்பர் 11-ஆம் தேதி புதுதில்லியில் நடைபெறும் அமெரிக்க-இந்தியா பொருளாதார மற்றும் நிதிக் கூட்டாண்மை கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு இந்தியாவிற்கு வருமாறு எல்லனை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அழைப்பு விடுத்தார்.