சாம்பாரை வைத்து சண்டை மூட்டி விட்ட பிக்பாஸ்.. லூசுத்தனமா கேள்வி கேட்டு சிக்கிய அடுத்த ஜூலி.
நாளுக்கு நாள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் சுவாரஸ்யம் கூடிக் கொண்டே இருக்கிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இந்த ரியாலிட்டி ஷோ கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆரம்பித்தது. காலம் காலமாக பிக் பாஸ் வீடு கூச்சலும், சண்டையுமாக தான் இருக்க வேண்டும் என்பது விஜய் டிவியின் விதிமுறையாக இருக்கிறது.
அதனாலேயே போட்டியாளர்கள் பலரும் உப்புச் சப்பில்லாத விஷயங்களுக்கு கூட சண்டையிட்டு டிஆர்பிக்கு உறுதுணையாக இருப்பார்கள். அந்த வகையில் இந்த சீசனிலும் முதல் சண்டையை பிக் பாஸ் ஒரு சாம்பாரை வைத்து அட்டகாசமாக ஆரம்பித்துள்ளார்.
நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் எக்க சக்கமான போட்டியாளர்கள் இருப்பதால் சாப்பாடு பிரச்சனை எப்போதுமே ஒரு கலவரத்தை உண்டாக்கும். அதன் அடிப்படையில் தற்போது பிக்பாஸ் வீட்டில் சாம்பாருக்காக நடக்கும் கலவரத்தை விஜய் டிவி ப்ரோமோவாக வெளியிட்டுள்ளது.
அதில் சமையல் டீமை பார்த்து தனலட்சுமி எதற்காக சாம்பாரை இப்ப செய்றீங்க என்று கேட்கிறார். அதற்கு மகேஸ்வரி லூசு மாதிரி கேள்வி கேட்டா என்ன பதில் சொல்றது என்று சொல்கிறார். ஆனாலும் விடாத தனலட்சுமி நீங்க எப்ப வேணா செய்யறதை எல்லாம் திங்க முடியாது என்று அநாகரிகமாக பேசுகிறார்.
உடனே மகேஸ்வரி அது எங்களுடைய இஷ்டம். இது பிக் பாஸ் வீடு இங்க என்ன வசதி இருக்கோ, அதை தான் சமைக்க முடியும். அதைத்தான் எல்லோரும் சாப்பிட வேண்டும் என்று நியாயமாக கூறுகிறார். ஆனாலும் தனலட்சுமி முகத்தில் கடும் கோபத்தை காட்டி முந்தைய சீசன் ஜூலியை ஞாபகப்படுத்துகிறார்.
ஆரம்பத்திலேயே இதுபோன்று ஏதாவது லூசு தனமாக செய்தால்தான் இறுதிவரை பிக் பாஸ் வீட்டில் இருக்க முடியும் என்றே அவர் இப்படி ஒரு வேலையை செய்வது அப்பட்டமாக தெரிகிறது. இந்த ப்ரோமோ தற்போது வைரலாகி கொண்டிருக்கிறது. மேலும் தனலட்சுமியின் ஓவர் ஆட்டிட்யூட் ரசிகர்களின் வெறுப்புக்கும் ஆளாகி இருக்கிறது.