பயங்கரவாதிகளுடன் சண்டையிட்ட ராணுவ நாய் உயிரிழப்பு

ஜம்மு காஷ்மீர் என்கவுண்ட்டரில் பயங்கரவாதிகளுடன் சண்டையிட்டு காயமடைந்த ராணுவ நாய் ஜூம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

ஸ்ரீநகரில் உள்ள ராணுவ கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராணுவ நாய் ஜூம் இன்று மதியம் 12 மணியளவில் உயிரிழந்தது. பயங்கரவாதிகளுடன் சண்டையிட்டபோது துப்பாக்கிக்குண்டு பாய்ந்த நாய்க்கு கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை தரப்பட்டு வந்தது.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ராணுவ நாய் ஜூம் உயிரிழந்தது. இரண்டரை வயதான ஜூம் நாய் கடந்த 10 மாதங்களாக இராணுவத்தின் 15 கார்ப்ஸின் தாக்குதல் பிரிவில் சேர்ந்து இருந்தது.

Leave A Reply

Your email address will not be published.