கேரளாவில் நரபலி பரபரப்பு அடங்குவதற்குள் அடுத்த சம்பவம்.. பெண் பிடியில் சிக்கிய சிறுவன்.. வீட்டை சூறையாடிய மக்கள்
கேரள மாநிலம் பத்தனம் திட்ட மாவட்டத்தில் 2 பெண்களை நரபலி நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் மேலும் பத்தனம் திட்ட மாவட்டத்தில் மலையாலப்புழா என்ற இடத்தில் வீட்டில் சிறுவர்களை மந்திரவாதம் செய்ய பயன்படுத்திய வாசந்திமடம் என்ற வீட்டில் உள்ள தேவகி என்ற பெண் கைது செய்யபட்டுள்ளார். இந்த சம்பவம் அறிந்து அங்கு திரண்ட பொது மக்கள் மற்றும் பாஜக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்களும் வீட்டை அடித்து நொறுக்கி சூறையாடி உள்ளனர்.
இந்த வீட்டில் இது போன்ற மந்திரவாதம் நடைபெருவதாகவும் அதில் சிறுவர்களை ஈடுபடுத்தி வருவதாகவும் ஏற்கனவே பல புகார்கள் எழுந்துள்ள நிலையில் தற்போது ஒரு சிறுவனை மந்திரவாதத்தில் ஈடுபடுத்துவதும் அப்போது அந்த சிறுவன் மயங்கி விழும் அதிர்ச்சிகர காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் காவல்துறை தேவகி என்ற அந்த பெண்ணை கைது செய்தனர். நரபலியின் நடுக்கம் மாறும் முன்னே மேலும் அதே மாவட்டத்தில் மூட நம்பிக்கை செயல்கள் அரங்கேறி உள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.