போதை ஒழிப்புக்காக மாணவர்களுடன் குரங்கு ஓட்டம் ஓடிய கராத்தே மாஸ்டர்
போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்த தூத்துக்குடியை சேர்ந்த 62 வயது கராத்தே பயிற்சியாளர் இமானுவேல் தன்னுடன் 6 வயது கராத்தே மாணவர்களுடன் இரண்டு கிலோமீட்டர் தூரம் குரங்கு ஓட்டம்(Monkey run) ஓடி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இன்றைய இளைய சமுதாயம் போதை வஸ்துகளில் சிக்கி தவித்து வரும் சூழ்நிலையில் போதை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த தூத்துக்குடியை சேர்ந்த 62 வயது கராத்தே பயிற்சியாளர் இமானுவேல் தன்னிடம் கராத்தே பயின்று வரும் 6 வயது மாணவர்கள் மூன்று பேருடன் இரண்டு கிலோமீட்டர் தூரம் MONKEY ஓட்டம் ஓடினர்.
அப்போது கராத்தே மாணவர்கள் அனைவரும் இவர்களை பின்தொடர்ந்து போதை ஒழிப்பு குறித்த வாசகங்களை கோஷங்களாக எழுப்பியவாறும் போதை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்தபடி வந்தனர்.
தூத்துக்குடி மூன்றாவது மைலில் இருந்து தொடங்கிய இந்த குரங்கு ஓட்டத்தை தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த மங்கி ஓட்டத்தின் முடிவில் அனைவரும் போதை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர்.