திலினிக்கு 05 கோடி கொடுத்து விட்டு, புகார் கொடுக்கவும் முடியாத பிரபல பிக்கு
கடந்த அரசில் உயர் பதவி வகித்த பிக்கு… பிரியாமாலிக்கு வழங்கப்பட்ட தொகை 05 கோடி…
முதலில் ஐபோன் ஒன்றை இலவசமாக வழங்கி பிக்குவை மடக்கியுள்ளார்… பின்னர் பணத்தை பெற்றுக்கொண்டு போலி தங்க கட்டிகளை பிக்குவிடமே அடகு வைத்துள்ளார்…
பௌத்த அங்கி அவிழ்ந்துவிடுமோ என்று பயந்து புகார் கூட கொடுக்க முடியாமல் திணறுகிறார் பிக்கு…
மதம் – தேசம் என நாட்டின் அரசியலில் தொடர்ந்தும் சர்ச்சைக்குரியவராக இருந்த பிக்கு, கடந்த அரசாங்கத்தின் போது விசேட பதவியொன்றில் இருந்தவர் , கோடிக்கணக்கான நிதி மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட திலினி பிரியமாலி என்ற பெண்ணின் முதலீட்டு பொறியில் வீழ்ந்துள்ளார்.
அரசியல் பேச்சுகளில் கலக்கிய பிரபல பிக்கு ஒருவர் , திலினி என்ற மோசடிக்கார பெண்ணுக்கு கிட்டத்தட்ட ஐந்து கோடி ரூபாவை வழங்கியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. ஆனால் இது தொடர்பில் இதுவரை இந்த பிக்கு முறைப்பாடு செய்யாத காரணத்தினால் விசேட விசாரணைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
திலினி , இந்த துறவியுடன் ஒரு குறிப்பிட்ட நட்பை வளர்த்துக் கொண்டதோடு, பிக்குவை 2019 இன் பிற்பகுதியில் உலக வர்த்தக மையத்தின் மேற்கு கோபுரத்தில் அவரது அலுவலகத்தைத் திறப்பதற்கும் அவரை அழைத்துள்ளார்.
திலினி , அப்போது அவருக்கு ஒரு மதிப்புமிக்க ஆப்பிள் ஐபோனை வழங்கியுள்ளார்.
இதன் மூலம் நெருக்கமான நட்பை உருவாக்கிக் கொண்டு , அதிக லாபம் ஈட்டும் முதலீடுகளில் பணம் வைப்பீடு செய்தால் பெரும் லாபம் பெறலாம் என்றும் முதலீடு செய்யும் பணத்திற்கு பதிலாக தங்க கட்டிகளை அடமானமாக தரலாம் என்றும் திலினி அவரிடம் கூறியுள்ளார்.
இதனை நம்பிய பிக்கு, திலினியின் நிறுவனத்தில் கிட்டத்தட்ட ஐந்து கோடி ரூபாவை டெபாசிட் செய்துள்ளதாகவும், அதற்கு பதிலாக அவருக்கு தங்க முலாம் பூசப்பட்ட போலி தங்கக் கட்டிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
மேலும், முதலீட்டாளர்களை ஏமாற்றுவதற்காக அவர் பயன்படுத்திய போலி தங்கக் கட்டிகளை (தங்க முலாம் பூசப்பட்ட பித்தளைக் கட்டிகள்) கடவத்தை பகுதியில் வசிக்கும் மற்றொரு பிக்குவின் மடத்தில் வைக்கும்படி செய்துள்ளதோடு, அங்கு அவை பாதுகாப்பாக இருக்கும் எனக் கூறி, பல்வேறு முதலீட்டாளர்களை அங்கு அழைத்துச் சென்று அவர்களுக்கும் அவற்றை காண்பித்து, ஏனைய முதலீட்டார்களிடமும் நம்பிக்கையை வளர்க்க கபடமாக நாடகமாடியுள்ளார்.