வடமாகாண பிரீமியர் லீக் சுற்றுப்போட்டிக்கான வெற்றிக்கிண்ண அறிமுக விழா.
வடமாகாண துடுப்பாட்ட சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள வடமாகாண பிரீமியர் லீக் சுற்றுப்போட்டிக்கான வெற்றிக்கிண்ண அறிமுக விழா நேற்று இரவு இடம்பெற்றது.
வடமாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற ஐந்து மாவட்டங்களை சேர்ந்த ஐந்து அணிகள் பங்குபற்றும் வடமாகாண பிரீமியர் லீக் சுற்றுப்போட்டி எதிர்வரும் 05ம் திகதி நடைபெறவுள்ள நிலையில் நேற்றையதினம் இப்போட்டிக்கான வெற்றிக்கிண்ணம் அறிமுகப்படுத்தியதோடு வீரர்களுக்கான சீருடையும் அறிமுகப்படுத்தப்பட்டது.
வடமாகாண துடுப்பாட்ட சங்கத்தின் தலைவர் ரதீபன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் வவுனியா மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவருமான கு.திலீபன் கலந்து கொண்டு வெற்றிக்கிண்ணத்தினையும் வீரர்களுக்கான சீருடையையும் அறிமுகப்படுத்தி வைத்தார்.
இந்நிகழ்வில் வடமாகாணத்தின் ஐந்து மாவட்டத்தை சேர்ந்த அணி வீரர்கள், பயிற்றுவிப்பாளர்கள், என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.