காங்கிரஸ் தலைவராகிறார் மல்லிகார்ஜுன கார்கே..!
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில், காங்கிரஸ் கட்சியின் முன்னணித் தலைவரும், வேட்பாளருமான மல்லிகார்ஜுன கார்கே பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
அகில இந்திய காங்கிரஸ் தலைவருக்கான தேர்தல் கடந்த திங்களன்று நடைபெற்றது. இத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முன்னணித் தலைவர்களான மல்லிகார்ஜூன கார்கே, சசி தரூர் போட்டியிட்டனர். அகில இந்திய அளவில் 9,915 காங்கிரஸ் நிர்வாகிகள் வாக்களித்தனர். தமிழ்நாட்டில் மட்டும் 695 வாக்குகள் பதிவாகின.
தேர்தல் வாக்கு எண்ணிக்கை பணி இன்று காலை 10 மணி முதல் தொடங்கியது. சமீபத்திய விவரங்களின் படி, மல்லிகார்ஜூன கார்கே 7897 வாக்குகளும், எதிர்வேட்பாளர் சசி தரூர் 1072 வாக்குகளும் பெற்றுள்ளனர். 416 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன. காங்கிரஸ் கட்சியின் நூற்றாண்டுகளுக்கு மேலான கால வரலாற்றில் தோ்தல் மூலம் தலைவர் பதவிக்கு தேர்தெடுக்கப்படும் 6-வது நபராக கார்கே உள்ளார்.