‘பொன்னியின் செல்வன்’ படம் பார்த்த மஹிந்த.
மணிரத்தினத்தின் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பார்த்துள்ளார்.
தமது துணைவியார் மற்றும் தமது நண்பர்களுடன் நேற்று மாலை கொழும்பு – வெள்ளவத்தையில் உள்ள திரையரங்கு ஒன்றுக்குச் சென்று திரைப்படத்தை மஹிந்த பார்த்துள்ளார் என்று அவரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.