இருவேறு இடங்களில் இருவர் வெட்டிப் படுகொலை!
இருவேறு பகுதிகளில் இருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு இன்று தெரிவித்துள்ளது.
கிரிபத்கொடை – பதிலியாதுடாவ பகுதியில் நபர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
51 வயதுடைய வத்தளையைச் சேர்ந்த நபரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்தநிலையில், இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாகத் தெரிவிக்கப்படும் 33 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கமே இதற்குக் காரணம் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, நேருநுவர – மகிந்தபுர பகுதியில் நேற்றிரவு வீடொன்றுக்குள் நபர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
45 வயதுடைய நபரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர்களின் சடலம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில், மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.