சூரிய கிரகணம் – திருப்பதி கோயில் நாளை மூடல்
நாளை சூரிய கிரகணம் நடைபெற உள்ளதால் காலை 8.11 மணி முதல் இரவு 7.30 மணி வரை திருப்பதி ஏழுமலையான் கோயில் மூடப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
சூரியன், நிலவு, பூமி மூன்றும் ஒரே நோ்க்கோட்டில் வரும் போது கிரகணங்கள் நிகழ்கின்றன. அப்போது நிலவின் நிழல் சூரியனை மறைத்தால் அது சூரிய கிரகணம் எனவும், பூமியின் நிழல் சந்திரனை மறைத்தால் அது சந்திர கிரகணம் எனவும் அழைக்கப்படுகிறது.
ஆண்டுதோறும் சராசரியாக 4 கிரகணங்கள் வரை நிகழும். அதன்படி சூரியனை முழுமையாக நிலவு மறைத்தால் அது முழு சூரிய கிரகணம் எனவும், ஒரு பகுதியை மட்டும் மறைத்தால் பகுதி சூரிய கிரகணம் எனவும் குறிப்பிடப்படுகிறது.
அந்தவகையில் தீபாவளி பண்டிக்கைக்கு மறு நாளான அக்டோபா் 25-ஆம் தேதி பகுதி சூரிய கிரகணம் நிகழ உள்ளது. சூரிய கிரகணத்தை தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை (அக்.25) மாலை 5.14 மணிக்கு காணலாம் என அறிவியல் மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
இந்த நிலையில நாளை சூரிய கிரகணம் நடைபெற உள்ளதால் காலை 8.11 மணி முதல் இரவு 7.30 மணி வரை திருப்பதி ஏழுமலையான் கோயில் மூடப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.