கரடியனாற்றில் கைக்குண்டு, கண்ணிவெடி மீட்பு!
மட்டக்களப்பு, கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள ஈரளக்குளம் காட்டுப் பகுதியில் கைக்குண்டு மற்றும் கண்ணிவெடி என்பன மீட்கப்பட்டுள்ளன என்று கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.
விமானப் படை புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த தகவலுக்கமைய இராணுவத்தினருடன் விமானப்படை புலனாய்வுப் பிரிவினர் இணைந்து ஈரளக்குளம் காட்டுப் பகுதியில் கைவிடப்பட்டிருந்த கைக்குண்டு ஒன்றையும், கண்ணிவெடி ஒன்றையும் நேற்று மாலை மீட்டு கரடியனாறுப் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
இதேவேளை, இந்தப் பகுதி கடந்த காலத்தில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.