‘ஃபயர் ஹேர்கட்’டால் நடந்த விபரீதம்!

ஃபயர் ஹேர்கட் செய்யும் போது இளைஞர் ஒருவருக்கு உடல் முழுவதும் தீ பரவி பாதிக்கப்பட்ட சம்பபம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஃபயர் ஹேர்கட், சமீபத்தில் பிரபலமடைந்ததுள்ளது. இது சிகை அலங்காரத்தின் ஒரு நுட்பமாகும். சிகை அலங்காரம் செய்யும் போது முடியை வடிவமைக்க நெருப்பைப் பயன்படுத்துகிறார்கள்.

குஜராத்தின் வாபியில் உள்ள ஒரு சிகை அலங்காரக் கடையில் புதன்கிழமை 18 வயது இளைஞன் ஃபயர் ஹேர்கட் செய்யும் போது பலத்த தீக்காயம் அடைந்தான். இச்சம்பவத்தை அடுத்து, இளைஞர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அந்த இளைஞருக்கு கழுத்து மற்றும் மார்பில் தீக்காயங்கள் இருந்ததாக காவல்துறையினர் வியாழக்கிழமை தெரிவித்தனர்.

சிகை அலங்காரம் செய்வதற்காக இளைஞரின் தலையில் ஒருவித ரசாயனம் தடவப்பட்டதால், பாதிக்கப்பட்டவரின் உடல் பாகங்கள் பலத்த தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவத்தின் விடியோ கிளிப் புதன்கிழமை சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது. குஜராத்தின் வல்சாத் மாவட்டத்தில் உள்ள வாபி நகரில் உள்ள சிகை அலங்காரக் கடையில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

ஃபயர் ஹேர்கட்டில் எந்த ரசாயனம் பயன்படுத்தப்பட்டது என்பது குறித்து விசாரணை நடந்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.