போதை மாத்திரை விற்பனை அமோகம்! – வவுனியாவில் மருந்தகங்களும் சிக்கின.
வவுனியாவிலுள்ள பல மருந்தகங்களுக்கும் உயிர்கொல்லி போதை மாத்திரை விற்பனையுடன் தொடர்புள்ளது தெரியவந்துள்ளதுடன், சில மருந்தகங்கள் ஏற்கனவே சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணத்திலுள்ள மொத்த தனியார் மருந்துகள் விற்பனை செய்யும் நிலையத்திலிருந்து வவுனியாவைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் பெருமளவு உயிர்கொல்லி போதை மாத்திரைகள் கொள்வனவு செய்திருந்தார் என்பது தெரியவந்திருந்தது. இதையடுத்து மருத்துவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.
இதன்போது வவுனியாவிலுள்ள வேறு சில மருத்துவர்கள் மற்றும் மருந்தகங்களுக்கு உயிர்கொல்லி போதை மாத்திரை விற்பனையுடன் தொடர்புள்ளமை தெரியவந்துள்ளது. அவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.