காட்டு யானை தாக்கி குடும்பஸ்தர் மரணம்!

காட்டு யானை தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் தம்புத்தேகம – கொத்மல்புர பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

காட்டு யானைகளின் அச்சுறுத்தல் குறித்து வனவிலங்கு அதிகாரிகளுக்குப் பலமுறை அறிவுறுத்தியும் எந்தப் பயனும் இல்லை என்று கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். நான்கு பிள்ளைகளின் தந்தையான நவரத்ன திஸாநாயக்க (வயது 59) நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் தனது வயல் பகுதிக்குச் செல்வதற்காக வீட்டிலிருந்து புறப்பட்டுள்ளார்.

இந்நிலையில், அவர் வயலுக்குச் சென்று கொண்டிருந்த போது காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார். மகன் மற்றும் பிரதேச மக்கள் அவ தம்புத்தேகம ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட போதும் அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளார் என்று மருத்துவர்கள் குறிப்பிட்டனர்.

தொடர்ந்து காட்டு யானைகளின் தாக்குதல் சம்பவங்கள் அங்கு பதிவாகி வருகின்றன என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். எனினும், தீர்வு காணப்படவில்லை என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். எவ்வாறாயினும், யானை – மனித மோதலை குறைப்பதற்கான வேலைத்திட்டம் இந்த வருட இறுதிக்குள் தயாரிக்கப்படும் என்று வனவிலங்கு மற்றும் வனவள பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.