பிறந்து 21 நாள்களே ஆன குழந்தையின் வயிற்றில் 8 கருக்கள்: மருத்துவர்கள் அதிர்ச்சி!
ஜார்கண்ட் மாநிலத்தில் பிறந்து 21 நாள்களே ஆன குழந்தையின் வயிற்றில் 8 கருக்கள் இருந்ததைக் கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து தனியார் மருத்துவமனை மருத்துவர் இம்ரான் கூறுகையில்,
கருவின் அளவு மூன்று செ.மீ முதல் 5 செ.மீ வரை இருந்தது. முதலில் குழந்தையின் அடிவயிற்றில், நீர்க்கட்டிகள் இருந்ததாகக் கண்டறியப்பட்டது.
ஜார்கண்ட் மாநிலம் ராம்கர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அக்டோபர் 10-ம் தேதி குழந்தை பிறந்தது. மருத்துவர்கள் குழந்தைக்கு வயிற்றில் கட்டி இருப்பதைக் கண்டறிந்து, உடனடியாக அறுவை சிகிச்சை செய்யுமாறு பெற்றோருக்குப் பரிந்துரைத்தனர்.
பிறந்து 21 நாள்களே ஆன குழந்தை மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டது. இதையடுத்து நவம்பர் 1 அன்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு கட்டிகள் அகற்றப்பட்டது.
பின்னர் தான் தெரிய வந்தது. நீர்க்கட்டி பகுதிக்குள் எட்டு கருக்கள் ஒன்றன்பின் பின் ஒன்றாக இருந்ததாக என்று. இது மருத்துவ அடிப்படையில் ஃபீடஸ்-இன்-பெடூ(எப்ஐஎப்) என்று அழைக்கப்படுகிறது. இது தவறான முதுகெலும்பு கரு என்றார்.
எட்டு கருக்கள் பற்றிய வழக்கு இதுவரை எங்கும் பதிவாகவில்லை. இது மிகவும் அரிதானது, 5 லட்சத்தில் ஒருவருக்கு தான் இவ்வாறு உருவாகும் என்று அவர் கூறினார்.
அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொண்டு, குழந்தையின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும், அடுத்த ஒரு வாரத்தில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவதாகவும் அவர் கூறினார்.