புதிய அமைச்சர்கள் தொடர்பில் ரணில்-மஹிந்த-தினேஷ் கலந்துரையாடல்!
புதிய அமைச்சர்கள் தொடர்பில் ரணில்-மஹிந்த-தினேஷ் கலந்துரையாடல்! நாமல்-ரோஹித-ஜோன்ஸ்டன்-மஹிந்தானந்தாவுக்கு அமைச்சு பதவிகள் இல்லை! ரணிலிடம் இருந்த நிதியமைச்சகமும் அகற்றப்படுகிறது!
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை சேர்ந்த நால்வருக்கு அமைச்சர் பதவிகள் வழங்கப்பட மாட்டாது என இணக்கம் காணப்பட்டுள்ள நிலையில், புதிய அமைச்சரவை நியமனம் தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
நாமல் ராஜபக்ச, மஹிந்தானந்த அளுத்கமகே, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் ரோஹித அபேகுணவர்தன ஆகிய நால்வருக்கு அமைச்சு பதவிகளை வழங்குவதில்லை என முடிவாகியுள்ளது .
இது தவிர, தற்போது அமைச்சர் பதவி வகிக்கும் சில எம்.பி.க்களின் பதவிகள் மாறுவதுடன், நிதியமைச்சர் பதவியும் மாறும்.
21வது அரசியலமைப்புத் திருத்தத்தின் உட்பிரிவுகளில் ஒன்று, பாதுகாப்பு அமைச்சர் பதவியைத் தவிர வேறு அமைச்சுப் பதவிகளை ஜனாதிபதி வகிக்க முடியாது என்பதாகும்.
அதன்படி, இப்போது ஜனாதிபதி , நிதி மற்றும் பொருளாதாரக் கொள்கை அமைச்சராக பதவி வகிக்க முடியாது. எனவே, தற்போது வெளிவிவகார அமைச்சராக பதவி வகிக்கும் அலி சப்ரியை மீண்டும் நிதியமைச்சராக நியமிக்க முன்மொழியப்பட்டுள்ளது.
பட்ஜெட் முன்மொழிவுகளை செயல்படுத்தும் பொறுப்புக்கு கூடுதலாக, சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்த நிதி அமைச்சருக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது.