கொரோனா நோய்த் தொற்று பரவாமல் தடுப்பதில் என்.95 முகக்கவசங்கள் சிறப்பான பங்காற்றுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தும்மல், சளி, எச்சில் துளிகள் அடுத்தவர் மீது தெறிப்பதன் மூலமே கொரோனா வைரஸ் வேகமாகப் பரவுவதால், முகத்தை கவசம் அணிந்து பாதுகாப்பது சிறந்த வழியாக பரிந்துரைக்கப்படுகிறது.
நோய்த் தொற்று பரவாமல் தடுப்பதில் என் 95 என்றழைக்கப்படும் மருத்துவர்கள் பயன்படுத்தும் முகக்கவசங்களின் பங்கு மிகச்சிறப்பானது என்று உறுதி செய்யும் ஆய்வாளர்கள், என் 95 முகக் கவசங்களும் சாதாரண துணியால் ஆன முகக் கவசங்களும் கொரோனா வைரசின் வேகத்தைத் தடுத்துவிடுவதால் மிகவும் குறைந்த அளவிலான பாதிப்பே ஏற்படுவதாக விளக்கம் அளிக்கின்றனர்.