ஹிருணிகா உட்பட பலர் கைது! (Video)
பெண்கள் உரிமைக்காக நடத்தப்பட்ட போராட்டத்தின் போது கைது செய்யப்பட்டதாக குருந்துவத்தை பொலிஸாருக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திருமதி ஹிருணிகா பிரேமச்சந்திரவை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பெண்களின் உரிமைகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த போராட்டம் ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகம் வரை சென்று , ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்திற்கு அருகில் சென்று கொண்டிருந்த போது, ஆர்ப்பாட்டக்காரர்கள் பலர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதால் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்டோர் குருந்துவத்தை பொலிசுக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர், அங்கு வைத்தே திருமதி ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட 15 பேரை பொலிஸார் கைது செய்தனர்.