பரந்தன் பழைய மாணவர்களினால் நடாத்தப்பட்ட அந்திவானம் 2022.

பரந்தன் பிரதேச மாணவர்களின் கல்வி மற்றும் பிரதேச நலன்களுக்காக கனடா பரந்தன் பழைய மாணவர்களினால் வருடந்தோறும் நடாத்தப்படுகின்ற அந்திவானம் நிகழ்வு இந்த வருடம் Baba banquet hall லில் கார்த்திகை 12ம் திகதி மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
நேற்று முன்தினம் சனிக்கிழமை நடைபெற்ற இந் நிகழ்வு உள்ளக அரங்கில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. கடந்த வருடம் அந்திவானம் நிகழ்வு மெய் நிகர் வாயிலாக நடைபெற்றமை எல்லோரும் அறிந்ததே.
பரந்தன் பழைய மாணவர் சங்கம் கனடா தலைவர் பேரின்பநாதன் சுப்பிரமணியம் அவர்களின் வரவேற்புரையைத் தொடர்ந்து நிகழ்வுகள் யாவும் இனிதே ஆரம்பித்து நடைபெற்றது.
இந்நிகழ்வினை கோபிதன் திசரூபன், அனக்சன் நந்தகுமார் ஆகிய இருவரும் மிகவும் அழகாக தொகுத்து வழங்கியமை பாராட்டுக்குரியதாகும்.
பாடசாலை பழைய மாணவர்களின் பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் என அடுத்த தலைமுறையினர் ஆர்வத்துடன் பங்கு பற்றி பல நிகழ்வுகளை தந்திருந்தமை சிறப்பம்சமாக அமைந்திருந்தது.
நிகழ்வின் இறுதியில் செயலாளர் கோணேஸ்வரி திசரூபன் நன்றியுரை வழங்கினார். அதன் பின்னர் வழங்கப்பட்ட இராப்போசன விருந்துடன் நிகழ்வுகள் யாவும் இனிதே நிறைவு பெற்றது.