ஆளுனர்கள் முஸம்மில் ஊவாவுக்கும், கொல்லுரே வட மேல் மாகாணத்துக்கும் மாற்றம்

வடமேல் மாகாண ஆளுநராக இருந்த ஏ.ஜே.எம்.முஸம்மில் இன்று (31) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ முன் ஊவா மாகாண ஆளுநராக பதவியேற்றார்.
ஊவா மாகாண ஆளுநராக இருந்த ராஜா கொல்லுரே வடமேல் மாகாண ஆளுநராக ஜனாதிபதியின் முன் பதவியேற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.