அரசை தேர்தலுக்கு அழைத்துச் செல்வதும் பைத்தியக்கார நாயைக் குளிப்பாட்டுவதும் ஒன்றே! – சஜித் சாடல்.
“அரசைத் தேர்தலுக்கு அழைத்துச் செல்வது பைத்தியக்கார நாயைக் குளிப்பாட்டுவதற்கு ஒப்பான கடினமான பணியாகும்.”
இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் (17) உரையாற்றும் போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“தேர்தலை நடத்துவதற்கு அரசமைப்பின் பிரகாரம் எந்தவித தடையும் இல்லை. ஆனால், அரசு பக்கம் ஒரே ஒரு தடையே இருக்கின்றது.
தேர்தல் முடிவு தொடர்பிலான சந்நிதியில் தாம் தோல்வியடைய முடியும் என்ற அரசின் மெய்சிலிர்க்க வைக்கும் அச்சமே இதற்குத் தடையாகவுள்ளது.
எனவே, அரசை தேர்தலுக்கு அழைத்துச் செல்வது பைத்தியக்கார நாயைக் குளிப்பாட்டுவதற்கு ஒப்பான கடினமான பணியாகும். நாடாளுமன்றம் கலைக்கப்படுவது தொடர்பில் நாட்டைத் தவறாக வழிநடத்த வேண்டாம்.
நாடாளுமன்றம் கலைக்கப்படுவது தொடர்பில் பிரதமர் மக்களையும் நாட்டையும் தவறாக வழிநடத்தும் அறிவிப்பொன்றை வெளியிட்டார். இது முற்றிலும் உண்மைக்கு புறம்பான அறிவிப்பாகும்” – என்றார்.
தேர்தல் நடத்துவது தொடர்பாக அரசமைப்பின் பிரகாரம் அமைந்த ஷரத்துகளையும் எதிர்க்கட்சித் தலைவர் சபையில் கோடிட்டுக் காட்டினார்.