ரணகளமாக மாறி கண்ணீரில் முடிந்த ராயல் பிக்பொஸ் டாஸ்க்
கடந்த 3 நாட்களாக தொடர்ந்து நடந்த அரச குடும்ப மியூசியம் டாஸ்க்கில் அரச குடும்பத்தின் கஜானா காலியானதால் , அந்த கஜானாவை நிரப்ப அரச குடும்ப காட்சியகத்தில் இருந்து களவாடி கஜானாவை நிரப்ப வேண்டும் என்பதே சிலருக்கு கொடுக்கப்பட்ட இரகசிய டாஸ்க். அந்த வேலை ராணியாருக்கும் (ரட்சித்தா) , தளபதிக்கும் (அசீம்) , வேலையாள் (கதிர்) ஆகியோருக்கு மட்டும் தெரிகிறது.
இவர்களுக்கு உதவியாக இன்னும் சிலர் திருட்டில் ஈடுபடுகிறார்கள். ஆனால் அவர்களுக்கு முழு விபரமும் தெரியாது.
காவல் பணிகளை பொறுப்பேற்பது தலைமை பாதுகாவலர் ADK. அங்கே களவு நடக்கும் போது அதை தடுக்க முனையும் ADK மற்றும் அசீம் இடையே விவாதங்கள் முற்றிய போது மிக மோசமான வார்த்தைகளை ADK பயன்படுத்துவதோடு , பொருட்களை எட்டி உதைத்து அந்த டாஸ்க்கை விட்டு வெளியேறுவதாக சென்று திரும்பி வருகிறார். ஜனனி ஒரு கோப்பையை உடைத்தது குறித்து உபதேசம் செய்த ADK , இங்கே அதைவிட மிக மோசமாக செயல்படுகிறார். அந்த இடத்தில் அசீம் – ADK இருவரும் ஆளை ஆள் டிகர் பண்ண முற்பட்டாலும் , ADK அதிகமாக உணர்ச்சிவசப்படுகிறார். அசீம் டிகரானாலும் லாவகமாக கையாள்கிறார்.
பிக்பொஸ் , ராஜகுருவான விக்ரமனை தனியாக அழைத்து நாட்டின் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டதால் அதற்கு பொறுப்பேற்று , அரசர் (மாஸ்ட்டர் றொபர்ட்) தனது முடியை துறந்து வனத்துக்கு செல்ல வேண்டும் எனவும் , அத்தோடு அந்த குகையில் உள்ள செல்வங்களோடு அவர் செல்லலாம் எனவும் , அதன் பின் அந்த சிம்மாசனத்தை ராணிக்கு (ரட்சித்தா) கொடுக்கச் சொல்கிறார். ராணி ஆட்சியை பொறுப்பேற்க விரும்பாது , அரசரோடு போனால் , அரச குமாரனை (மணிகண்டன்) அல்லது இளவரிசியை (ஜனனி) பொறுப்பேற்கச் செய்யச் சொல்கிறார்.
அதற்கு ராஜகுருவான விக்ரமன் , அரச குமாரன் விளையாட்டு தனமாக இருக்கிறார். ஜனனிக்கு செந்தமிழ் சரியாக வராது எனும் குற்றச்சாட்டை கொன்பெசன் (வாக்குமூல அறை) அறையில் , முன் வைத்து அவர்கள் நாட்டின் தலைமையை ஏற்க தகுதியில்லை என்றார்.
ராணி தலைமையை ஏற்காது போனால் மக்கள் தேர்வு செய்யும் ஒருவரை அரசராக்கும்படி பிக்பொஸ் அறிவுரை சொல்கிறார்.
ராஜகுருவான விக்ரமன் , பிக்பொஸ் சொன்னதை சரியாக அரச சபையில் வெளிப்படுத்தாமையால் அரசி சூழ்ச்சி செய்தார் என , அரசருக்கும் அரசிக்கும் இடையே கருத்து முரண்பாடு ஏற்படுகிறது. அந்த கதாபாத்திர முரண் அவர்களது நட்பையும் சிதைக்கிறதாக இன்றைய எபிசோட் கண்ணீரில் முடிந்தது.
அவர்கள் இருவரும் சிறை சென்ற பின்னரே உண்மையை உணர்கிறார்கள்.