வடகொரியாவுக்கு கண்டனம் தெரிவித்த ஜப்பான்.

கம்போடியாவில் நடந்த ஆசியான் மாநாட்டின்போது அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், தென் கொரிய அதிபருடனும், ஜப்பான் பிரதமருடனும் முத்தரப்பு உச்சி மாநாடு நடத்தி, பேசியபோது, அவர்கள் வடகொரியாவின் சமீபத்திய ஏவுகணை சோதனைகளுக்கு தங்களது கடும் கண்டனத்தை பதிவு செய்தனர்.

இதற்கு பதிலடி தருகிற வகையில், நேற்று காலை வடகொரியா மீண்டும் கண்டம் விட்டு கண்டம் பாயக்கூடிய குறுகிய அளவிலான ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக தென்கொரியா தெரிவித்துள்ளது.

ஜப்பான் பிரத்தியேக பொருளாதார மண்டலம் பகுதியில் அந்த ஏவுகணை பறந்தது போய் விழுந்தது என்று கடலோர காவல்படை கூறியது. இது ஜப்பானுக்கு அருகே, அதாவது வடக்கு ஹொக்கைடோவில் உள்ள ஒரு தீவில் இருந்து சுமார் 210 கி.மீ. தொலைவில் உள்ளது.

இந்நிலையில், வடகொரியாவுக்கு ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். வடகொரியாவுக்கு எதிராக கடும் எதிர்ப்பை தெரிவித்தோம். இதுபோன்ற செயல்களை எங்களால் சகித்துக் கொள்ள முடியாது என தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.