மலேசிய தேர்தலில் மகாதீர் முகமது தோல்வியடைந்தார்
மலேசியாவின் முன்னாள் பிரதமர் மகாதீர் முகமது 53 ஆண்டுகளுக்கு பின்னர் முதல் முறையாக தேர்தலில் தோல்வியடைந்துள்ளார்.
நேற்றைய தினம் (19) இடம்பெற்ற பொதுத் தேர்தலில் அவர் தனது ஆசனத்தை இழந்துள்ளதாகவும், 8 வீதத்திற்கும் குறைவான வாக்குகளைப் பெற்றுள்ளமையினால் தனது பாதுகாப்பு வைப்புத் தொகையையும் இழக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
97 வயதான மகாதீர் முகமட்டின் கட்சியால் எந்த நாடாளுமன்றத் தொகுதிகளையும் கைப்பற்ற முடியவில்லை.
1981 முதல் 2003 வரை 22 ஆண்டுகள் மலேசியாவின் பிரதமராக இருந்த மகாதீர் முகமது, 2018 ஆம் ஆண்டு உலகின் மிகவும் வயதான பிரதமராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அப்போது 93 வயதாக இருந்த திரு மகாதீர் முகமட், சில மாதங்களுக்குப் பிறகு பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.