ஜனாதிபதியின் கரங்களை பலப்படுத்த முன்வாருங்கள் – பிரதமர் அழைப்பு.

“வீழ்ச்சியடைந்த எமது நாட்டை மெல்ல மெல்ல முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லும் சிறந்த ஒரு தலைவரே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க. இந்நிலையில், எதிரணியினர் கட்சி வேறுபாடுகளை மறந்து நாட்டின் நன்மை கருதி ஜனாதிபதியின் கரங்களைப் பலப்படுத்த முன்வரவேண்டும்.”
இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார் பிரதமர் தினேஷ் குணவர்த்தன.
நாட்டின் சமகால நிலைமை தொடர்பில் கருத்துரைக்கும் போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“2023 ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. மூன்றாம் வாசிப்பும் பெரும்பான்மையுடன் நிறைவேறும். அதில் எவரும் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை.
தற்போதைய நிலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் நாட்டைப் பற்றியே சிந்திக்க வேண்டும். வாக்களித்த மக்களின் நலனைப் பற்றியே கவனம் செலுத்த வேண்டும். ஆனால், எதிர்க்கட்சியினர் அதற்கு மாறாகச் செயற்படுகின்றனர். அவர்கள் தங்களைச் சுயபரிசோதனை செய்ய வேண்டும்.
என்னதான் சவால்கள் வந்தாலும் அதனை எதிர்கொண்டு இந்த அரசு தொடர்ந்து வெற்றிப் பாதையில் பயணிக்கும்” – என்றார்.