ஹோட்டல் விடுதியில் ரகசிய சுரங்க அறை அமைத்து விபச்சாரம்… 7 பெண்கள் மீட்பு, 6 பேர் கைது
கர்நாடகா மாநிலம் பெங்களூரூவில் சட்டவிரோதமான முறையில் பாலியல் தொழில் நடைபெறுவதாக மாநில குற்றப்பிரிவு காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில், பெங்களூருவில் உள்ள காட்டன்பேட், சிட்டி மார்கெட், காலாசிபல்யா ஆகிய பகுதிகளில் காவல்துறை அதிரடி சோதனை நடத்தியது.
காட்டன்பேட் பகுதியில் உள்ள துர்கா பேலஸ் என்ற விடுதியில் காவல்துறை நடத்திய சோதனையில் அங்கு நான்காவது மாடியில் ரகசிய சுரங்கம் அமைத்து அங்கு பெண்கள் அடைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. முறையான காற்றோட்ட வசதி கூட இல்லாத அந்த சட்டவிரோதமாக பெண்களை கடத்தி இங்கு அடைத்து வைத்து நீண்ட காலமாக பாலியல் தொழிலில் ஈடுபட்டது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
இதையடுத்து துர்கா பேலஸ் ஹோட்டலின் உரிமையாளர் ஜகதீஷ், வரவேற்பாளர் மகாதேவ் ஆகிய இருவரை காவல்துறை கைது செய்துள்ளது. இந்த ஹோட்டலில் சிசிடிவி கேமராக்கள் நாலாபுறமும் அமைத்துள்ள உரிமையாளர் காவல்துறையினர் அங்கு நெருங்கினால் வேலை ஆட்களுக்கு சிக்னல் தந்துவிடுவார். உடனடியாக பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களை சுரங்க அறையில் வைத்து பதுக்கி வந்துள்ளனர்.
இதேபோல், சிட்டி மார்கெட், காலாசிபல்யா பகுதியிலும் இரு விடுதியில் அதிரடி சோதனை நடத்திய காவல்துறை பாலியல் தொழிலில் ஈடுபட்ட பெண்கள், குற்றத்தை நடத்தி வந்த நபர்கள் ஆகியோரை கைது செய்துள்ளது. ரகசிய தகவலின் அடிப்படையில் கர்நாடகா CCB நடத்திய இந்த சோதனையி பாலியல் தொழிலில் ஈடுபட்ட 7 பெண்கள் மீட்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.அதேபோல் பாலியல் தொழிலை நடத்தி ஆறு ஆண்களும் இந்த காவல்துறை சோதனையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.