சீனாவில் மின்னல் வேகத்தில் பரவும் கொரோனா.
சீனாவின் உகான் நகரில் 2019 டிசம்பரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று, உலக நாடுகளையெல்லாம் பாதித்தது. நேற்று முன்தின நிலவரப்படி உலகமெங்கும் 63 கோடியே 95 லட்சத்து 78 ஆயிரத்து 239 பேரை கொரோனா பாதித்துள்ளது. இந்தத் தொற்றால் 66 லட்சத்து 25 ஆயிரத்து 979 பேர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவில் அதிகபட்சமாக 9 கோடியே 85 லட்சத்து 3 ஆயிரத்து 462 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது. அங்கு 10 லட்சத்து 78 ஆயிரத்து 929 பேர் இறந்தனர். இப்படி உலகை உலுக்கிய கொரோனாவை இந்தியா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகள் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளன. ஆனால் சீனாவில்தான் இந்தத் தொற்றைக் கட்டுப்படுத்த முடியாத நிலை உள்ளது. அங்கு பல நகரங்களில் பொதுமுடக்கம் இருந்தாலும் தொற்று அவ்வப்போது எழுச்சி பெற்று வருகிறது.
அந்த வகையில் ந்நிலையில் நேற்று(வியாழக்கிழமை) பாதிப்பு மேலும் அதிகரித்துள்ளது.புதிதாக 32,943 பேருக்கு தொற்று உறுதி செய்யபட்டுள்ளது. இதில் 3,103 பேருக்கு அறிகுறிகள் உள்ளன. 29,840 பேருக்கு எந்தவித கொரோனா அறிகுறிகளும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இறப்புகள் எதுவும் இல்லை. சீனாவில் கொரோனா பாதிப்பு தற்போது அதிகரித்து வருவது உலக நாடுகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.