க.பொ.த சாதாரணதர பரீட்சை பெறுபேறுகள்…

2021ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரணதர பரீட்சை பெறுபேறுகளை சுமார் ஒரு மணித்தியாலத்தின் பின்னர் இலங்கை பரீட்சைகள் திணைக்களம் வெளியிடும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளதாக சற்றுமுன்னர் புதிய தகவலொன்று வெளியாகியுள்ளது.
முதலாம் இணைப்பு
க.பொ.த சாதாரணதரப் பரீட்சைப் பெறுபேறுகள் சற்றுமுன் வெளியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இம்மாதம் 30ஆம் திகதிக்குள் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை முடிவுகளை வெளியிட எதிர்பார்த்திருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன முன்னதாக தகவல் வெளியிட்டிருந்தார்.
க.பொ.த சாதாரணதரப் பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பில் சற்றுமுன் வெளியான தகவல் | Gce Ol Results Released
இந்த நிலையிலேயே தற்போது பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற போதும் சுட்டெண்ணை பதிவேற்றும் போதும் முடிவுகள் கிடைக்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
என்ற போதும் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியானதும் பெறுபேறுகளை https://doenets.lk/ இணையத்தளத்தில் பார்வையிட முடியும்.