நடிகர்களின் ஆசை வார்த்தையால் ஈர்ப்பு! சூதாட்டத்தில் ஈடுபட்ட இளம்பெண் தற்கொலை

ஓன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த இளம்பெண்ணொருவர் தமிழகத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் அஜய் குமார் மண்டல். இவரது மனைவி பந்தனா மஜ்கி. இருவரும் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் வசித்து வந்தனர்.
இந்த நிலையில் சமூக வலைதளங்கள், தொலைக்காட்சிகளில் நடிகர்கள் ஓன்லைன் சூதாட்ட விளையாட்ட விளம்பரத்தில் நிறைய பணம் சம்பாதிக்கலாம் என தோன்றி சொன்னதை பார்த்து பந்தனாவுக்கு அதில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது.
தற்கொலை
இதையடுத்து அஜய்குமார் மண்டல் மனைவி பந்தனா ஓன்லைன் சூதாட்ட செயலியை பதவிறக்கம் செய்து விளையாடி வந்துள்ளார்.
இந்த விளையாட்டில் அவர் 70 ஆயிரம் ரூபாயை பறிகொடுத்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கணவர் கண்டிக்க விரக்தியில் பந்தனா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்த பொலிசார் சம்பவ இடத்திற்கு வந்து பந்தனாவின் சடலத்தை கைப்பற்றிவிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓன்லைன் சூதாட்டத்துக்கு தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து தமிழ்நாடு சட்டசபையில் அவசர தடை சட்டத்தை தமிழக அரசு நிறைவேற்றியது. இந்த சட்டம் ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அளிப்பு வைக்கப்பட்டு இன்னும் ஒப்புதல் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.